Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொலை

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (14:20 IST)
மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் கர்ஜத் தாலுக்காவில் உள்ள கொபர்டி கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


 
 
இந்த கூட்டு பலாத்கார மற்றும் கொலை செயலில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு வக்கீலை நியமிக்க கோரிக்கை எழுந்ததை அடுத்து உஜ்வல் நிகம் என்ற வழக்கறிஞரை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் நியமித்துள்ளார்.
 
தனது தாத்தா வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு கடந்த 13-ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு அந்த மாணவி வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
 
மாணவியின் பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக சித்ரவைதை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மகாராஷ்டிராவின் நிர்பயா வழக்கு என பேசப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 ஆண்டு பழமையான கொடைக்கானல் அருகே உள்ள கிராமம்.. மருத்துவ உதவி செய்த நிறுவனம்..!

இரவு முழுவதும் மது விருந்து? காலையில் 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு.. கோவில் திறக்கும் நேரம் மாற்றம்..!

காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை! பிணத்தை சூட்கேஸில் இழுத்து சென்ற கொலையாளி! - அதிர்ச்சி வீடியோ!

90 மணி நேர வேலை.. மனுஷங்களா இல்லை மெஷினா? - அகிலாஷ் யாதவ் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்