Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக் ஏரியில் பாலம்; மீண்டும் சீண்டும் சீனா! – தீவிர கண்காணிப்பில் இந்தியா!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (10:43 IST)
லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் நடந்த பாஹ்காங் ஏரியில் சீனா பாலம் கட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன படைகள் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அதேபோல சீன தரப்பிலும் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா கூறியது.

இதை தொடர்ந்து இருநாடுகளும் எல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இந்தியா – சீனா இடையே நீண்ட நாட்களாக சர்ச்சையில் இருக்கும் இன்னொரு எல்லைப்பகுதியான பாங்காங் டிசோ ஏரியில் சீனா பல்வேறு கட்டமைப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாங்காங் டிசோ பகுதியில் சீனா பாலம் ஒன்றை கட்டியது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாவதாக மற்றொரு பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் “ஆக்கிரமிக்கப்பட்ட பாங்காங் டிசோ ஏரியில் சீனா பாலம் அமைப்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments