Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு மடங்கு சம்பள உயர்வு பெறும் தலைமை தேர்தல் ஆணையர்கள்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (08:55 IST)
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் சம்பள உயர்வையடுத்து  தலைமை தேர்தல் ஆணையர்களின் சம்பளம் இரு மடங்காக உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு 90 ஆயிரத்திலிருந்து 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 80 ஆயிரத்திலிருந்து 2.25 லட்சம் ரூபாயாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளுக்கு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2.80 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
தேர்தல் கமிஷன் சட்டம் 1991 ன்படி, தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு உச்சநீதிமன்ற  நீதிபதிகளுக்கு இணையான சம்பளம் வழங்கப்பட வேண்டும். நீதிபதிகளின் சம்பள உயர்வையடுத்து தலைமை தேர்தல் ஆணையர்களுக்கும் சம்பள உயர்வுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, மாநிலங்களவையில் வருகிற பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அங்கும் இந்த மசோதா நிறைவேறி ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாகி விட்டால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான சம்பளத்தை  இந்திய தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்கள் பெறுவார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments