Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம்: சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் |

Mahendran
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (17:02 IST)
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது என்பதும் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக சென்னை ஐஐடி இந்த இடத்தை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.
 
கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் இந்த தரவரசை உருவாக்கப்பட்டுள்ள வருகிறது.
 
மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல், ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி தரம், உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், பெங்களூர் ஐஏஎஸ்சி இரண்டாவது இடத்தையும், மும்பை ஐஐடி மூன்றாவது இடத்தையும், டெல்லி ஐஐடி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.   மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தையும் மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments