Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா? – மத்திய அரசு தகவல்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (11:14 IST)
கொரோனாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போட்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 10 ஆயிரத்தில் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதியாவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோவாக்சின் தடுப்பூசியை முதல் டோஸ் எடுத்துக் கொண்ட 93,56,436 பேரில் 4208 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இரண்டாவது தவணை செலுத்திக் கொண்ட 17,37,178 பேரில் 698 பேருக்கும் கொரோனா உறுதியானதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments