Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாமல் காரில் பயணமா?- பாஜக பிரமுகருக்கு அபராதம் விதித்த போலீஸார்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (11:41 IST)
காரில் ஹல்மெட் போடாமல் அமர்ந்திருந்ததாக டிரைவருக்கு பெங்களூர் போலீஸார் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


பெங்களூரு மல்லேசுவரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். பாஜக பிரமுகரான இவருக்கு நேற்று முன் தினம் பெங்களூரு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராத ரசீது ஒன்று வந்தது. அதனைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயம்தான். அந்த அபராத ரசீதில்  அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு,  கடந்த 4ம் தேதி பசவேசுரா சர்க்கிளில் இந்த வாகனம் சென்ற போது, அதன் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், அதனால் ரூ. 100க்கு இந்த அபராத ரசீது அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எந்திர கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றார்.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments