Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்முவில் கவிழ்ந்த பேருந்து: 24 பேர் பலி

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (10:22 IST)
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பள்ளதாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கிஸ்த்வார் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கேஸ்வன் என்னும் பகுதி. அந்நகரில் பல பயணிகளை ஏற்றிகொண்டு ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது கேஸ்வன் நகருக்கு அருகில் ஒரு குறுகிய சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவனக்குறைவால் சாலையின் ஒரத்திலிருந்த பள்ளதாக்கில் மினி பேருந்து கவிழ்ந்தது.

அவ்வாறு கவிழ்ந்ததில் அந்த மினி பேருந்தில் பயணித்த 24 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்து, கேஸ்வனுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் பகுதியில் பல பள்ளதாக்கை ஒட்டிய பல குறுகிய சாலைகள் உள்ளதால் இது போன்ற விபத்துகள் அந்த பகுதியில் நடந்துகொண்டே வருகின்றது. இந்நிலையில் தற்போது பள்ளதாக்கில் கவிழ்ந்த மினி பேருந்தில் பயணித்த பயணிகளில் 24 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments