Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தில் சிறுவன் கொலை...12 வயது சிறுவன் கைது

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (17:50 IST)
திருமண நிகழ்ச்சியின் 5 ஆம் வகுப்பு மாணவனை கொன்ற சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பெரலி  என்ற பகுதிக்கு அருகிலுள்ள நந்தப்பூர் கிராமத்தில் வசிப்பவர்  அரி சங்கர். இவர் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது மகன் குமார் அங்குள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவ  நாளன்று, அருகிலுள்ளா கிராமத்திற்கு குமார் திருமணத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, மற்ற சிறுவர்களுடன் அவர் நடனமாடினார். 

திடீரென்று, 23 வயது சிறுவனுக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் தாக்கிக் கொண்டனர். அப்போது, 12 வயது சிறுவன் குமாரை பாட்டியால் தாக்கினான்.

இதில், தலையில் பலத்த காயமடைந்தான். அருகிலுள்ளோர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், 12 வயது சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்