Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற சிவசேனா திட்டம்: பகீர் தகவல்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (12:59 IST)
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரி எழுதிய புத்தகத்தை மும்பையில் வெளியிட்ட விவகாரம் எதிரொலியாக பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற சிவசேனா திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.


 
 
மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு பாஜக வை சேர்ந்த சுதீந்திரா குல்கர்னி என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.
 
ஆனால் இதனை ஏற்காத சிவசேனா தொண்டர்கள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குல்கர்னி மீது கருப்பு மையா வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
 
இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இவ்விவகாரத்தின் எதிரொலியாக பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல்  வெடித்துள்ளது.
 
மகாராஷ்ட்ரா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, சிவசேனா அமைச்சர்களை, கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, விரைவில் பதவி விலகச் சொல்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments