2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்: சிவசேனா தலைவர்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (22:22 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 280 இடங்கள் கிடைத்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்

இன்று ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் நடைபெற்ற சிவசேனா பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மேலும் பேசியதாவது:

அயோத்தியில் ராமர் கோவில் கண்டிப்பாக கட்டப்படும் என்ற வாக்குறுதி கொடுத்ததால்தான் பாஜகவுக்கு கடந்த தேர்தலில் 280 தொகுதிகள் கிடைத்தது. ஆனால் ராமர் கோவில் கட்டுவதாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், 2019ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் வெறும் 2 இடங்கள் தான் கிடைக்கும்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் சிவசேனா கட்சியில் இருந்துதான் வர வேண்டும். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும்போது மக்களிடம் எழுச்சியை பார்ப்பதால் இதை உறுதியாகா சொல்கின்றேன்' என்று உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments