Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடியூரப்பா பதவியேற்பு டுவிட்டர் பதிவை நீக்கிய சுரேஷ் குமார்

Webdunia
புதன், 16 மே 2018 (21:02 IST)
கர்நாடகா மாநில முதல்வராக நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவியேற்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவை நீக்கிவிட்டார்.

 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. பாஜக 104 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. 78 இடங்களை பிடித்த காங்கிரஸ் மஜக கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தது. ஆனால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரை சந்தித்து கால அவகாசம் கோரினார்.
 
இன்று காலை முதல் கர்நாடகாவில் குதிரை பேரம் தொடங்கியது. பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாக குமாரசாமி குற்றம்சாட்டினார். அணி மாறாமல் இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்துகள் பேருந்துகள் மூலம் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
இந்நிலையில் நாளை கர்நாடகா முதல்வராக எடியூரப்பா காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் குமார் டுவீட் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி 104 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ள பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பா என்று கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இந்த பதிவை சுரேஷ் குமார் நீக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments