Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவை வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: பாஜக எம்.எல்.ஏ மீது எப்.ஐ.ஆர்..!`

Mahendran
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (10:26 IST)
கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது, சட்டப்பேரவை வளாகத்திலேயே ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்எல்ஏ முனிரத்னம், சட்டப்பேரவை வளாகத்திலும், அரசு அவருக்கு வழங்கிய காரிலும், அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையை சுத்தம் செய்யும் பரிகாரத்தில் ஈடுபட்டனர், இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கொலை மிரட்டல், ஜாதியை சொல்லி திட்டுதல், பாலியல் வன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முனிரத்னா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அதோடு, 40 வயதான இன்னொரு பெண், நட்சத்திர விடுதிகளில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருப்பதால், முனிரத்னா மீது ஏழு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில், காவல் கண்காணிப்பாளர் சௌமியா லதா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாவது பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அடுத்த கட்டுரையில்