Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் நடத்தியது- முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (15:50 IST)
குஜராத் தேர்தலில் பாஜக போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் நடத்தியுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும், அம்மாநிலத்திற்கு டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய மும்முனைப் போட்டி இருக்கும் நிலையில் மூன்று கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த  நிலையில்,டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்,  குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாமல் இருந்தால், டெல்லி அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை கைவிடுவதாக பாஜகவைச் சேர்ந்தவர்கல்  பேரம் பேசிவருவதாகவும், மதுபாவ ஊழல் வழக்கில் சிக்கியுள்ள டெல்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிக்கப் பேச்சு நடத்தியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments