Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நிர்பயா குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி”.. ஆம் ஆத்மியை குற்றம் சாட்டும் பாஜக

Arun Prasath
திங்கள், 20 ஜனவரி 2020 (11:24 IST)
நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை ஆம் ஆத்மி அரசு காப்பாற்ற முயற்சி செய்வதாக டெல்லி மாநில பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி, “இரு ஆண்டுகளாக குற்றவாளிகளுக்கான தண்டனையை அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஆம் ஆத்மி அரசு மறைத்துவிட்டது. நீதித்துறை நடைமுறைகளை நிறுத்திய கெஜ்ரிவால் அரசு, நிர்பயா குற்றவாளிகளை தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க காலத் தாமதம் செய்கிறது என எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு கெஜ்ரிவால், “நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை அளிப்பதே எங்களின் நோக்கமும். இந்த வழக்கில் நாங்கள் எந்த கால தாமதமும் செய்யவில்லை” என பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்