Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேட்பாளரான அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்டும்-ராஜ்புத் சமூக மக்கள்

Sinoj
வியாழன், 4 ஏப்ரல் 2024 (20:10 IST)
குஜராத் மாநிலம்  ராஜோட் தொகுதி பாஜக  வேட்பாளரான மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்டும் என்ற ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியில் இணைந்துள்ள கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக  பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
 
இந்த் நிலையில், குஜராத் மாநிலம்  ராஜோட் தொகுதி பாஜக  வேட்பாளரான மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, ராஜ்புத் சமூக மக்கள் பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்தனர் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
 
இதற்கு குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநில ராஜ்புத் சமூக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், அமைச்சர் ரூபாலா தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்ட பின்பும்  அதனை மறுத்துள்ள ராஜ்புத் சமூக மக்கள் ராஜ்கோட் தொகுதிக்கு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments