Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஈபிஎஸ் பேச்சு!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (08:57 IST)
பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிந்தன
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அதிமுக கூட்டணியில் இணையும் பாஜகவுக்கு 30 சீட்கள் மட்டுமே தர முடியும் என முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் இதனால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது
 
மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற வகையில் பாஜக எதிர்பார்ப்பதாகவும் ஆனால் 30 சீட் என்பது எதிர்பார்ப்பு விட மிகவும் குறைவாக இருப்பதாகவும் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இருப்பினும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் கூடுதலாக தொகுதிகளை பெற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சந்தித்ததை அடுத்து அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments