Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (17:12 IST)
பீகாரில் 32 தொகுதிகளில் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் 55 சதவிகிதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 49 தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது 

இதனைதொடர்ந்து, இரண்டாம் கட்டத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பீகாரில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியான கயா, ஜெகனாபாத் அவுரங்காபாத், அர்வால், கைமூர், ரோதாஸ் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 32 தொகுதிகளில் 9119 மையங்களில் இரண்டாம் கட்டத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம்  மிகுந்த பகுதிகள் உள்பட  32 தொகுதிகளில் 55 சதவிகிதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம்  மிகுந்த பகுதிகளில் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments