Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் : நாடே முடங்கும் அபாயம்

இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் : நாடே முடங்கும் அபாயம்

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (19:11 IST)
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் நாளை மறுநாள் நடத்த உள்ள வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தில்,  இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பணிகளில் உள்ள 15 கோடி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரிகிறது..

சாலை போக்குவரத்து, மின் வினியோகம், மின்சாரம், சுரங்கம், பாதுகாப்பு, டெலிகாம் மற்றும் இன்சூரன்ஸ் துறைகள், சமையல் எரிவாயு வினியோகம் அனைத்தும் பாதிக்கும். அதேபோல், வங்கிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்படுகிறது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு ஆட்டோ மற்றும் டாக்சி யூனியன்களும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே அவற்றின் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ரயில்வே சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments