Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முடங்கும் வங்கிகள் சேவை! அதிருப்தியில் பொதுமக்கள்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:02 IST)
வங்கிகள் நாளை முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை இயங்காது என்பதால் பணப்பரிவர்த்தனை பிரச்சனை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் தான் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக 4 நாட்கள் இயங்காமல் இருந்தன. இதனால் பாதிக்கப்பட்ட பண பரிவர்த்தனை எல்லாம் இப்போது சரியாகி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு வாரத்துக்கு வங்கிகள் சேவை பொது மக்களுக்கு இருக்காது என சொல்லப்படுகிறது.

நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறையை அடுத்து, திங்கட்கிழமை ஹோலி விடுமுறையை செவ்வாய் கிழமை வேலை நாளாக உள்ளது. ஆனால் அதற்கு அடுத்த மார்ச் 31 ஆம் தேதி நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை  இருக்காது. அதற்கடுத்த நாள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நாள் என்பதால் அன்றும் சேவை இருக்காது. ஏப்ரல் 2 ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறையை அடுத்து ஏப்ரல் 3 சனிக்கிழமை வங்கி சேவை இருக்கும். ஆனால் அதற்கடுத்த நாள் ஞாயிறு விடுமுறை என்பதால் விடுமுறையாகும். இப்படி அடுத்த வாரம் முழுவதும் வங்கி சேவை தொடர்ச்சியாக கிடைக்காத சிக்கல் மக்களுக்கு எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் செத்துட்டேன்னு யார் சொன்னது? வீடியோவில் வந்து ஷாக் கொடுத்த நித்யானந்தா!

இன்று திடீரென மீண்டும் சரியும் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments