Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக் - வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் நிலை

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (16:32 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிகள் தொடர்பான சேவைகள் பாதிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


 

 
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், நிரந்தர வேலை வாய்ப்புகளில் அவுட்சோர்சிங் அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 சங்கங்களை சேர்ந்த பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
 
இதுதொடர்பாக  கடந்த 21ம் தேதி மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால், நாளை ஒரு நாள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஸ்டிரைக்கில் மொத்தம் 7 சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் பங்கு பெறுகின்றனர். இதனால் வங்கி தொடர்பான சேவைகள் நாளை கடுமையான பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகளும் நாளை பணிகள் நடைபெறாது எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments