Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈ-ரிக்சா துறையில் காலடி வைக்கும் பஜாஜ் ஆட்டோ.. பயணிகளுக்கு புது அனுபவம்?

Siva
திங்கள், 10 பிப்ரவரி 2025 (09:25 IST)
இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, நடப்பு நிதியாண்டிற்குள் ஈ-ரிக்சா துறையில் காலடி எடுத்து வைக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈ-ரிக்சா பிரிவு முற்றிலும் பொதுவான அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, பயணிகளுக்கு உயர்ந்த அளவில் மனநிறைவையும் வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈ-ரிக்சா என்பது கிட்டத்தட்ட ஆட்டோ போலவே இருக்கும். அதே நேரத்தில், இது புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று சக்கர வாகன இயக்கத்தில், கிட்டத்தட்ட 50%  ஆட்டோவின் பகுதியாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 45,000 வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை பல்வேறு வடிவங்களில் மற்றும் அளவுகளில் வருகின்றன.

இதில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்டவை. இதை மாற்றும் விதமாக, எங்கள் நிறுவனத்தின் ஈ-ரிக்சா  அறிமுகப்படுத்துவதன் மூலம் சந்தையை ஒழுங்கமைத்து, புதிய வணிகத்தை கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனேகமாக மார்ச் மாதத்திற்குள் இந்த ஈ-ரிக்சா அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

டெல்லி தேர்தல் முடிவுகள் பீகாரிலும் எதிரொலிக்குமா? தேஜஸ்வி யாதவ் கருத்து..!

எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாமல் அதிமுக விழா! புறக்கணித்த செங்கோட்டையன்! - எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி?

ஈ-ரிக்சா துறையில் காலடி வைக்கும் பஜாஜ் ஆட்டோ.. பயணிகளுக்கு புது அனுபவம்?

சென்னை அண்ணா நூலகத்தில் தொடுதிரை வசதி.. இனி எளிமையாக வாசிக்கலாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments