Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தேன் நிலவுக்கு போகும் ராகுல்' - பாபா ராம்தேவ் கருத்தால் சர்ச்சை; மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

Webdunia
சனி, 26 ஏப்ரல் 2014 (13:56 IST)
தேன் நிலவுக்கு போவதுபோல் தலித் மக்களின் வீடுகளுக்கு போகிறார் ராகுல் காந்தி என்று பாபா ராம்தேவ் விமர்சித்ததற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் தனது தொகுதியில் உள்ள தலித் மக்கள் வீடுகளுக்கு பொழுதுபோக்குவதற்காகவும், தேன் நிலவுக்காகவும் செல்கிறார் என ராம்தேவ் கூறியிருந்தார்.
 
மேலும், ராகுல் காந்தி திருமண விவகாரம் குறித்தும் ராம் தேவ் பேசியிருந்தார். ராகுல் காந்திக்கு இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால், அவர் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் பிரதமர் ஆக முடியாது என சோனியா காந்தி கூறியதால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் எனவும் ராம்தேவ் கூறியிருந்தார். ராம்தேவின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் ராம்தேவ் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
அதில் திக்விஜய் சிங் கூறியதாவது:- "ராம்தேவ் பேச்சு தலித் மக்களுக்கு எதிரானது. ராகுலை அவதூறாக பேசிய ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மோடியும், பாஜகவும் ராம்தேவ் பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் நிறுத்தம்! என்ன காரணம்?

கடந்த வார பெரும் சரிவுக்கு பின் ஏற்றத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

முடிந்தது காலாண்டு விடுமுறை.. ஆர்வத்துடன் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள்..!

ஈரானை தாக்க உரிமை உள்ளது; பகீர் கிளப்பும் நேதன்யாகு! - ஈரான் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!