Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி வழக்கு : நிலம் இந்துக்களுக்கே சொந்தம் ! இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம்!

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (11:23 IST)
அயோத்தி வழக்கில்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு இன்று வழங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுக்காப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை நீதிமன்றத்துக்கு வந்த 5 நீதிபதிகளும் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர்.
 
இன்று  காலை 10: 30 மணிக்கு சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வாசிக்க 30நிமிடங்கள் ஆகும் என்பதால் நீதிபதி ரஞ்சன் கோகாய் பொறுமையாக தீர்ப்பை வாசித்தார்.
 
 
அதில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  கூறியுள்ளதாவது :
 
ஒரு மத நம்பிக்கை இன்னொரு மத நம்பிக்கையை பறிப்பதாக இருக்கக்கூடாது. அமைதியை காக்கும் வகையில் அனைவரும்  ஏற்றுக்கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்டும் பொறுப்பில் நீதிமன்றம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
அயோத்தி நில வழக்கில் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோகி அகாராவின் மனுவில் போதிய ஆதாரங்கள் இல்லை. காலி  இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
 
ஷியா வக்பு வாரியத்திம்ன் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் எனவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும், சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அமைப்பை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும். சன்னி வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரபிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments