Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`எல்லம்மா’வை பச்சை குத்திய ஆஸ்திரேலிய மாணவர் மீது பாஜக தாக்குதல்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (16:22 IST)
`எல்லம்மா’ என்ற பெண் கடவுள் படத்தை தனது உடலில் பச்சை குத்திய ஆஸ்திரேலிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை பாஜகவினர்  அடித்து உதைக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.
 

 
சமீபத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் முதியவரை வீட்டிற்குள் புகுந்து அடித்தே கொன்றனர். நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இச்சம்பவத்தை எதிர்த்து எழுந்த கண்டனக்குரல்கள் எழுந்தன.
 
இந்நிலையில், பெங்களூருவில் பெண் கடவுள் படத்தை தனது உடலில் பச்சை குத்திய ஆஸ்திரேலிய நாட்டவர் தாக்கப்பட்ட இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பல நாடுகளில் இந்தியா குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நடந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த பெங்களூரு பத்திரிகையாளர்கள் கூறும்போது, ”பெங்களூரு உணவு விடுதிக்கு உணவருந்த வந்த ஆஸ்திரேலிய சட்டக்கல்லுhரி மாணவர் மேத்யூ கார்டன் என்பவரின் உடலில் `எல்லம்மா’ என்ற பெண் தெய்வத்தின் உருவத்தை டாட்டூ வரைந்திருந்தார்.
 
அவர் இந்திய மக்களின் மீது நேசம் கொண்டு தனது உடலில் எல்லம்மாவை வரைந்திருந்தார். அப்போது உணவு விடுதிக்கு வந்த ரமேஷ் யாதவ் என்ற உள்ளூர் பாஜக பிரமுகர் அந்த படத்தை அழிக்கும்படி அவரை மிரட்டியுள்ளார்.
 
மேத்யூ தனது உடலில் வரைந்து கொள்வது என்பது தனது உரிமை என்று வாதிட்டுள்ளார். இதற்கிடையே, ரமேஷ் யாதவ் தனது மொபைலில் தொடர்பு கொண்டு அடியாட்களை வரவழைத்திருக்கிறார். அடியாட்கள் வந்தவுடன் மேத்யூவை சூழ்ந்து கொண்டு, டாட்டூவை அழிக்காவிட்டால் டாட்டூவை தோலோடு சேர்த்து உரித்து எடுத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
 
அந்த சமயத்தில் அப்போது அங்கு அசோக் நகர் போலீசார் வந்துள்ளனர். அவர்கள் முன்னிலையிலும் ரமேஷ் மீண்டும் மேத்யூவை மிரட்டியுள்ளார். இது முழுவதும் நான்கு வீடியோக்களில் பதிவாகியுள்ளது.
 
பின்னர் மேத்யூவையும் அவரது தோழியையும் அசோக் நகர்காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் நிலையத்தில் மேத்யூவை மிரட்டி, டாட்டூ வரைந்ததற்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதித் தருமாறு மிரட்டியதால் அவர் வேறு வழியின்றி அந்த மன்னிப்பு கடிதத்தை எழுதித் தந்துள்ளார்” என்றார்.
 
நடந்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் கண்டன அறிக்கைகளை விடுத்துள்ளனர்.

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments