Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆங் சாங் சூகி இந்தியா வருகை: குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் ஆகிறார்

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (06:22 IST)
இந்திய குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த  விழாவின் போது நடைபெறும் அணிவகுப்புகளுக்கான ஒத்திகை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நாளை தலைநகர் டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைப்பார்

இந்த நிலையில் நாளைய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக மியான்மர் நாட்டின் ஆங் சான் சூகி கலந்து கொள்கிறார். இதற்கான நேற்று இந்தியா வந்த அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது

மேலும் ஆங் சான் சூகி உள்பட மேலும் பத்து ஆசியான் அமைப்பின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அவர்கள்  இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகியோர்கள் ஆவர்.

 

தொடர்புடைய செய்திகள்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments