Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ரயிலில் கொள்ளை முயற்சி - துப்பாக்கி சூடு; கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (08:58 IST)
சண்டிகரில் இருந்து மதுரை நோக்கி வந்த சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் நடந்த கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது.
 

 
சண்டிகரில் இருந்து மதுரைக்கு வரும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளியன்று இரவு உ.பி., மாநிலம் நக்வால்-டாப்ரி பகுதிக்கு இடையே வந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் ஆயுதங்களுடன் இருந்த சில நபர்கள் ரயிலின் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
 
உடனடியாக துப்பாக்கியை காட்டி நகைகளை கழற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் ரயில் நிறுத்தப்பட்டதும் அபாயச் சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு வந்த மத்திய துப்பாக்கி ஏந்திய போலீசார் கொள்ளையர்களை நோக்கி சுடத் துவங்கினர்.
 
இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பித்து ஓடி விட்டனர். பெரும் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது.
 
சமீபத்தில் சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் 5.76 கோடி ரூபாய் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சில நாட்களில் நடந்த இந்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments