Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க: எதிர்க்கட்சிகளுக்கு அருண்ஜெட்லி வேண்டுகோள்

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (08:57 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை நேற்று முன் தினம் பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து அதிரடியாக தீவிரவாதிகளின் முகாம்களை தகர்த்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தாக்க முயற்சித்த பாகிஸ்தான் விமானங்களையும் இந்தியா துரத்தி அடித்தது. 
 
இந்த நிலையில் நேற்று எதிர்க்கட்சிகள் கூடிய கூட்டம் ஒன்றின் முடிவில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் இந்தியப் ராணுவத்தை பிரதமர் மோடி அரசு அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் பத்திரிகைகள் தங்களுக்கு ஆதரவாக எழுத ஆரம்பித்தன.  பாகிஸ்தான் தரப்பில்தான் நியாயம் இருப்பதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக இந்தியா, பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய அரசியல் தலைவர்களே கூறி வருவதாகவும் பல பாகிஸ்தான் பத்திரிகைகள் எழுதி வருகின்றன
 
இந்த நிலையில் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா ஒரே குரலில் பேச வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கைகளை பாகிஸ்தான் தனது தரப்பு நியாயமாக பயன்படுத்த அனுமதிக்கும் நிலையை உருவாக்கக்கூடாது என்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments