Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை மாவில் வெடிமருந்து -மீண்டும் ஒரு வாயில்ல ஜீவனுக்கு நடந்த கொடுமை!

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (08:40 IST)
இமாச்சல பிரதேசத்தில் கோதுமை மாவில் வெடிமருந்து கலந்து கொடுக்கப்பட்டு அதை சாப்பிட்ட பசுவின் வாயில் வெடித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் கர்ப்பமாக இருக்கும் யானை ஒன்று அன்னாசி பழத்தில் வெடிவைத்து கொடுக்கப்பட்டு, அதை சாப்பிட்டு பலியானது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்மந்தமாக இணையத்தில் கண்டனங்கள் எழுந்தன. மேலும் இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் இதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிடும் போது பசுவின் வாயிலேயே வெடித்து வாய்ப்பகுதி சிதைந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை பசுவின் உரிமையாளர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் காண்போரை அதிர்ச்சி கொள்ள செய்யும் விதமாக உள்ளது. சமீபகாலமாக நம் நாட்டில் விலங்குகள் மீதான கொடூரங்கள் அதிகமாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments