Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை….

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (16:22 IST)
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்த சத்தேனா என்பவர் சாதிக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட தனது மகள் அனுராதாவை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியைச்  சேர்ந்தவர் சத்தேனா. இவருக்கு அனுராதா என்ற மகள் இருந்தார். அவர், அதே கிராமத்தில் வசிக்கும்  ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணனைக் காதலித்துள்ளார். இதற்கு அனுராதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே அனுராதாவும் லட்சுமணும் வீட்டை விட்டு வெளியேறி ஹைதராபாத் சென்று டிசம்பர் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணம் முடிந்து மூன்று வாரங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர் புதுமணத் தம்பதியினர். லட்சுமணன் வீட்டில் இருவரும் தங்கியிருப்பது தெரிந்து அனுராதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூட்டமாக வந்து லட்சுமணன் மற்றும் அவரது உறவினர்களைத் தாக்கி விட்டு அனுராதாவைக் கடத்திச் சென்றுள்ளனர்.

அனுராதாவை பக்கத்து ஊருக்கு கடத்திச் சென்று கொலை செய்த சத்தேனா கும்பல் அவரது உடலை எரித்து சாம்பலை ஆற்றில் கரைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து லட்சுமணன் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாக சத்தேனா மற்றும் உறவினர்கள் மீது புகார் அளிக்க சத்தேனாவும் உறவினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ணர்.

தெலங்கானாவில் சில மாதங்களுக்கு முன்னர் இதேப் போல காதல் திருமணம் செய்த அம்ருதா – பிரணய் தமபதியினரில் பிரனய் பொது இடத்தில் வைத்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மாநிலத்தில் சமீப காலமாக ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments