Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்ய மறுத்த விரிவுரையாளரின் முகத்தில் ஆசிட் ஊற்றிய மாணவி

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2014 (09:25 IST)
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுஜன்யா என்ற பெண் தன்னைக் காதலித்துவிட்டு வேறொருப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட விரிவுரையாளரின் முகத்தில் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.
 
ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுஜன்யா என்ற பெண், நரசராவ்பேட்டை பகுதியில் உள்ள டிகிரி கல்லூரியில் இளங்கலை பத்தார்.
 
அப்போது, அவருக்கும் அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பனியாற்றிய வெங்கடரமணா என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் சவுஜன்யாவின் கல்லூரிக் காலம் முடிந்து விட்டதால், முதுகலை கணிதம் பயில்வதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் அவர் சேர்ந்துள்ளார்.
 
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்தபடியே விரிவுரையாளர் வெங்கடரமணாவை சவுஜன்யா காதலித்து வந்துள்ளாதாகக் கூறப்படுகிறது.
 
இதற்கிடையில், தனது வேலையை ராஜினாமா செய்த வெங்கடரமணா, அதே மாவட்டத்தில் உள்ள நல்லப்பாடு பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
 
இதைத் தொடர்ந்து, சவுஜன்யாவின் காதலை வெங்கடரமணா மறுத்து, கடந்த ஆண்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், பிற்பகல் உணவு இடைவேளயின்போது வெங்கடரமணா கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது, கல்லூரிக்கு வெளியே ஆசிட் பாட்டிலுடன் காத்திருந்த சவுஜன்யா வெங்கடரமணாவின் முகத்தில் அந்த ஆசிட்டை வீசியுள்ளார்.
 
இதனால், வெங்கடரமணா அலறித் துடித்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், ஆசிட் வீசிய சவுஜன்யாவை மடக்கிப் பிடித்துள்ளனர்.
 
வெங்கடரமணா மீது வீசிய ஆசிட்டின் சில துளிகள் சவுஜன்யாவின் முகத்திலும் தெறித்திருந்தது. இதைத் தொடர்ந்து, தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments