Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜைக்கு மட்டும் வடியும் வெள்ளம்? ஆந்திராவில் ஆச்சர்யமான சிவன் கோவில்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (11:35 IST)
ஆந்திராவில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய சிவன் கோவில் ஒன்றில் பூஜைக்கு மட்டும் வெள்ளம் குறைவதாக கூறப்படும் சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திராவின் நந்தியாலா மாவட்டத்தில் கொத்தப்பள்ளி அருகே புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. கிருஷ்ணா நதிக்கரை அருகே இந்த கோவில் அமைந்துள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோவில் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது.

அதனால் கோவில் பூஜை பணிகள் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. சமீபமாக வெள்ள நீர் வடிந்து கோவிலின் கோபுரம் மற்றும் சில பகுதிகள் மெல்ல தெரிய தொடங்கியுள்ளன. எனினும் வெள்ளம் முற்றிலும் வடியாததால் மக்கள் கோவிலுக்கு செல்வதில் சிக்கல் உள்ளது.

இதனால் கோவில் பூசாரி மட்டும் அவ்வபோது படகில் சென்று கோவில் மூலவருக்கு பூஜைகள் செய்து வருகிறார். பூஜைக்கு செல்லும்போது வெள்ளம் வடிந்து கருவறை தெரிவதாகவும், பூஜை முடிந்த பின் தானாக வெள்ளம் அதிகரித்து கருவறையை மூடிவிடுவதாகவும் அவர் கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மெல்ல வெள்ளம் வற்றி வருவதால் மகாசிவராத்திரிக்குள் கோவில் முழுவதுமாக தென்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments