Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க தொலைக்காட்சிகளில் விளம்பரம்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:43 IST)
இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா டிவீட் செய்தது உலக அளவில் கவனத்தைப் பெற்றது.

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து நேற்று பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்தார். விவசாய போராட்டம் குறித்து நாம் ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறோம் என்று அவர் பதிவு செய்திருந்தார் .ரிஹானாவின் இந்த டுவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்திய பிரபலங்களான பாலிவுட் சினிமாக் காரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர் தலையிட வேண்டாம் என பொங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள் எல்லோரும் நிதி திரட்டி அமெரிக்காவின் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான சூப்பர் பௌல் போட்டிக்கு இடையே ஒளிபரப்ப ஒரு விளம்பர படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் அமெரிக்காவில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments