Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானிக்கு ரூ. 56 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் !

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (14:09 IST)
இந்தியாவில் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனமான சௌதி அராம்கோ நிறுவனம் நேற்றைக்கு ஒரேநாளில் 320 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் மிகப்பெரிய பெட்ரோல் விற்பனை சந்தையை வைத்துள்ளது.
 
எனவே இந்நிறுவனம் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சவூதி அராம்கோ பல பில்லியன் டாலர்களுக்கு வாங்கவுள்ள நிலையில், சவூதி அராம்கோ நிறுவனத்துக்கு 320 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
 
நேற்று சவூதி அராம்கோ நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அதன் விலையை 20% குறைத்து வெளியிட முடிவு செய்ட்து. இதனால்,அங்குள்ள பங்குச் சந்தை என்பது 9.3% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 
 
இந்நிலையில் சவூதி அராம்கோ நிறுவனத்தில் கடந்த 2 நாட்களில் சுமார் 320 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. அத்துடன், அராம்கோ சவூதி நிறுவனத்தின் பங்குதாரரான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் முகேஸ் அம்பானி, தனது சொத்து மதிப்பில்  56, 000 கோடி ரூபாய் இழந்துள்ளார். சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 50 பில்லியன் டாலரில் இருந்து 42.2 பில்லியன் டாலராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments