Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கட்சிகளுடன் கூட்டணி? சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Sinoj
சனி, 9 மார்ச் 2024 (18:10 IST)
முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும்,   திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு,  வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
 
பல கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்ட  நிலையில், சமீபத்தில் பாஜக முதற்கட்ட  மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
 
இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
அதன்படி, நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டப்பேரவை தேர்தல்களை பாஜக, பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் , கூட்டணி அமைத்து எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இண்று அறிவித்துள்ளார்.
 
மேலும், தொகுதிப் பங்கீடுகள் குறித்த அறிவிப்பு இன்றே வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments