Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் Suicide Attack - அல்கொய்தா பகிரங்க மிரட்டல்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (09:02 IST)
இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்ய தொடங்கினர்.
 
இதுகுறித்து பாஜக விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியும் உத்தரவிட்டது. இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்து இந்திய அரசும் அறிக்கை வெளியிட்டது.
 
இருப்பினும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. பாஜக செய்தி தொடர்பாளரின் கருத்துக்கு ஈரான், ஈராக், குவைத், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா உள்ளிட்ட 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் சில நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடிதம் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த கடிதத்தில் இஸ்லாமிய மத இறைதூதர் நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம்.

மேல் குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments