Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை கொடுக்காத மருமகளுக்கு எயிட்ஸ் ஊசி! மாமியார் செய்த கொடூரம்!

Prasanth Karthick
ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (11:25 IST)

வரதட்சணை கொடுக்காத மருமகளை பழிவாங்க அவருக்கு ஹெச்.ஐ.வி ஊசியை மாமியார் செலுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கோவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஜஸ்வாலா பிரான் காலியாரை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 2023ம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது மணமகளுக்கு ரூ.15 லட்சம் ரொக்கமும், பல லட்சம் மதிப்புள்ள நகைகளும் வரதட்சணையாக பெண் வீட்டார் வழங்கியுள்ளனர்.

 

ஆனால் அதில் திருப்தியடையாத மணமகனின் தாயார் கடந்த சில நாட்களாக மருமகளை துன்புறுத்தி வந்துள்ளார். வரதட்சணையாக மேலும் ரூ.25 லட்சமும், ஸ்கார்பியோ காரும் வாங்கி வரச் சொல்லி மருமகளை பிறந்த வீட்டிற்கு துரத்தியுள்ளார். இந்த விஷயம் இரு வீட்டாருக்கு பொதுவான ஆட்கள் இடையே பஞ்சாயத்து பேசித் தீர்க்கப்பட்டது.

 

ஆனாலும் மருமகள் கூடுதல் வரதட்சணை கொண்டு வராததால் கோபத்தில் இருந்த மாமியார், அவரை பலவாறு தொல்லை செய்துள்ளார். கொடுமையின் உச்சமாக எச்.ஐ.வி பாதிப்பு உள்ள ஊசியை பயன்படுத்தி மருமகளுக்கு ஊசிப் போட்டுள்ளார். இதனால் உடல் நலிவுற்ற இளம்பெண் மருத்துவமனை சென்றபோது அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து இளம்பெண்ணும், அவரது பெற்றோர்களும் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வரதட்சணை கொடுக்காததற்காக மாமியார் அரங்கேற்றிய இந்த கொடூரம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments