Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்: வயநாட்டில் ராகுல் காந்தி வாக்குறுதி!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (14:00 IST)
அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கொண்டு வந்த நிலையில் அந்த திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்த நாட்டின் அரசியலில் அமைப்பையே இல்லாமல் செய்து வருகின்றன என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அக்னிபாத் திட்டம் என்பது மிகவும் மோசமான திட்டம் என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்தை ரத்து செய்வோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.  அக்னிபாத் திட்டம் வேண்டும் என்று இந்திய ராணுவம் கேட்கவில்லை அக்னிபாத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்தது பிரதமர் அலுவலகம் தான் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

எனவே இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வயநாடு மக்களிடம் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments