Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி!

Siva
திங்கள், 4 மார்ச் 2024 (11:00 IST)
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9.64 லட்சம் ம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் ராகுல் காந்தி இன்று இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்

பொய் வாக்குறுதிகள் கொடுத்து பிரதமர் ஆனவரின் அலுவலகத்திலேயே பல முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணியிடங்களை ஒரு சுமையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கருதுவதாகவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்

தொடர்ச்சியாக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும் அரசு பணியிடங்கள் இளைஞர்களின் உரிமை என்றும் அவை நிரப்புவதற்கு வலுவான திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

இந்தியா கூட்டணி பொறுப்பேற்றதும் அரசு பணியிடங்கள் என்ற மூடப்பட்ட கதவுகளை இளைஞர்களுக்காக திறந்து வைப்போம் என்றும் வேலை வாய்ப்பின்மை என்ற இருளிலிருந்து இளைஞர்களை நாங்கள் காப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments