Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் அதிவிரைவு தாக்குதல் ஏவுகணை சோதனை வெற்றி.. ராஜ்நாத் சிங் வாழ்த்து..!

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (08:28 IST)
இந்தியாவின் அதிவிரைவு தாக்குதல் ஏவுகணை வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆராய்ச்சியாளர்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூர் என்ற பகுதியில் நடந்த சோதனையில் அதிவிரைவு வான்வழி தாக்குதல் ஏவுகணை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது ஏவுகணையின் வேகம், உயரம், வரம்பு ஆகியவை சரிபார்க்கப்பட்டதாகவும் அனைத்தும் மிகச் சரியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட அபியாஸ் ஏவுகணை தானியங்கி ஏவுகணை தானியங்கி விமான சேவையுடன் சுயமாக வான் வழியில் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் இதன் மூலம் முந்தைய ஏவுகணை சோதனை விட இது நவீனமானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அபியாஸ் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து ஆய்வாளர்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியை இழக்கும் அண்ணாமலை!? அடுத்த தலைவர் அந்த நடிகரா?

டெல்லியில் பளார் பளார் என அறை வாங்கிய அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு

2 ரயில்கள் நேருக்கு மோதி பெரும் விபத்து.. இரு ரயில்களின் டிரைவர்களும் பலி..!

குரூப் 1, 1ஏ தேர்வுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments