Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்தில் சிக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (12:34 IST)
பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


 
 
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ள, அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநிலத்தின் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
பயணத்தின் இரண்டாவது நாளான இன்று காலை ஜலந்தர் நகரில் இருந்து சீக்கிய பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரை நோக்கி ஒரு இன்னோவா காரில் பயணம் அவர் செய்தார். அவருடன் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் கார்களும் சென்றன.
 
பிஏபி சவுக் பகுதியை நெருங்கியபோது, முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் வந்த கார் வேகமாக மோதியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 
 
சிறிது நேரத்திற்கு பிறகு பொற்கோவிலில் தரிசனம் செய்த அவர் பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சி அமைந்தால் பொற்கோவிலை சுற்றியுள்ள வட்டாரங்களில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்போம் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments