Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆதாரை ஒழிப்போம்: ப.சிதம்பரம்

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (09:17 IST)
இந்திய பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று அனைவருக்கும் ஆதார். ஆதார் அட்டை அனைவருக்கும் கொடுத்து அந்த எண்ணை வங்கி, பாஸ்போர்ட், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், மொபைல் எண் உள்பட அனைத்திலும் இணைக்க வேண்டும் என்பதே மத்திய, மாநில அரசின் கொள்கையாக இருந்து வருகிறது.


 


ஆதார் அட்டையை கட்டாயப்படுத்த கூடாது என்று சுப்ரீம் கோர்ட் பல தீர்ப்புகள் வழங்கியபோதிலும் ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசால் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஆதாரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 'ஆதார் கார்டு திட்டத்திற்கு சட்ட ஆதாரமே கிடையாது... காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆதாரை ஒழிப்போம்' என்று கூறியுள்ளார். ஆதார் அட்டைக்காக பல லட்சம் கோடி செலவு செய்துள்ள பணம் வீணாகுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments