Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டோடு இனி ஆதாரும் கட்டாயம்!!

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (16:16 IST)
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதனை பலர் எதிர்த்தாலும், மத்திய அரசு எதிர்ப்புகளை கண்டுக்கொள்வதாக இல்லை.


 
 
இந்நிலையில், உத்தரபிரதேசத்திலும் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என யோகி ஆதித்யநாத் அற்வித்துள்ளார்.
 
வரும் பொதுத்தேர்வின் முதல் இந்த விதுமிரை நடைமுறைக்கு வரும் என கூறபட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கல் அனைவரும் பிப்ரவரி 2018-க்குள் ஆதாரை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
 
பொதுத்தேர்வுக்கு பதிவு செய்யும் போதும், தேர்வு எழுத வரும் போதும் ஆதார் கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆள்மாறாட்டத்தை தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயமாக்கபடுகிறது என காரணம் கூறப்பட்டுள்ளது. பள்ளி மாணவர் ஆதார் இல்லாமல் தேர்வு எழுத முடியாமல் போனால் அந்த பள்ளியின் முதல்வர் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டுமாம்.
 
பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டோடு இனி ஆதார் கார்டையும் தேர்வு எழுதும் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments