Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிலிட்டரிகாரர் வீடுன்னு தெரியாது.. சாரிங்க! – கடிதம் வைத்துவிட்டு திருடன் எஸ்கேப்!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (13:33 IST)
கேரளாவில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையடிக்க சென்ற திருடன் அது ராணுவ வீரரின் வீடு என தெரிந்ததும் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவாங்குளம் பகுதியில் பல கடைகளில் திருடிய திருடன் ஒருவன் அங்குள்ள ராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் திருட பூட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கிறான். உள்ளே சென்றதும் அங்குள்ள புகைப்படங்களை வைத்து அது ராணுவ வீரரின் வீடு என தெரிந்து கொண்ட திருடன், அங்கு திருடாமல் ஒரு கடிதம் மட்டும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.

அந்த கடிதத்தில் ”இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் திருட உள்ளே நுழைந்து விட்டேன். பைபிளின் ஏழாவது கட்டளையை மீறி விட்டேன். ராணுவ அதிகாரி அவர்களே என்னை மன்னித்து விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளான்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள போலீஸ் அந்த திருடனை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments