Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ChatGPT, DeepSeek போல இந்தியாவுக்கு தனி AI Model ரெடி! - மத்திய அமைச்சர் கொடுத்த அடடே அப்டேட்!

ChatGPT  DeepSeek போல இந்தியாவுக்கு தனி AI Model ரெடி! - மத்திய அமைச்சர் கொடுத்த அடடே அப்டேட்!
Prasanth Karthick
வியாழன், 30 ஜனவரி 2025 (15:59 IST)

தற்போது உலக நாடுகள் AI Model என்னும் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய போரில் இறங்கியுள்ள நிலையில் இந்தியாவும் விரைவில் தனது சொந்த AI Modelஐ வெளியிட உள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்ட பாய்ச்சலாக AI Model உருவாகியுள்ளது. அமெரிக்காவின் OpenAI உருவாக்கிய ChatGPT உலகம் முழுவதும் Automation Processல் பெரும் வீச்சை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல கூகிள் (GEMINI) உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏஐ மாடல்களை உண்டாக்கினாலும் அவற்றால் சாட் ஜிபிடி அளவு செயல்பட முடியவில்லை.

 

இந்நிலையில்தான் அந்த சாட்ஜிபிடிக்கே சூடு வைக்கும் வகையில் சீனா தனது DeepSeek AI மாடலை களமிறக்கியுள்ளது. அறிமுகமாகி ஒரு வார காலத்திலேயே சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளியதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க ஷேர் மார்க்கெட்டையும் ஒரு ஆட்டம் காண வைத்துள்ளது டீப்சீக். இதனால் உலக நாடுகளிடையே தற்போது AI War கிட்டத்தட்ட தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இந்தியாவும் தனது புதிய AI Modelஐ அடுத்த 10 மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து பேசிய அவர் “இந்தியாவின் முதல் ஏஐ மாடலை உருவாக்க கடந்த ஆண்டு மார்ச் மாதமே பிரதமர் மோடி அனுமதி வழங்கிவிட்டார். இந்தியாவின் ஏஐ திட்டத்தை CCF (Common Compute Facility) அடிப்படையில் உருவாக்கி வருகிறோம். அடிப்படையில் 10 ஆயிரம் ஜிபியு இலக்குகளை நிர்ணயித்த நிலையில் தற்போது 18,693 ஜிபியுக்களை பட்டியலிட்டுள்ளோம். 

 

இதை வைத்து விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட 18 செயலிகளை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 8 முதல் 10 மாதங்களுக்குள் இந்த ஏஐ தயாராகி விடும்” என அவர் கூறியுள்ளார்.

 

உலக அளவில் பெரும் போட்டி போடும் Trained AI Modelகளுக்கு இந்தியாவின் ஏஐ ஈடுகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments