Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 வயது பிஞ்சு குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த அயோக்கியன் கைது

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (08:12 IST)
மகாராஷ்டிராவில் 1 வயது பிஞ்சு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்குநாள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டும் சிறிமிகள் மீதான பாலியல் தொல்லைகள் குறைந்தபாடில்லை.
 
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி வேலை பார்த்து வந்த தமிழகத்தை சார்ந்த குடும்பத்தினர், சாலையோரம் கூடாரம் அமைத்து அங்கு தங்கி வந்தனர்.நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த அவர்களது ஒரு வயது குழந்தையை அதே பகுதியை சேர்ந்த அயோக்கியன் மால்ஹரி பன்சோட்(22) என்பவன் கற்பழித்ததோடு, குழந்தையை கொன்று வீசிவிட்டு சென்றுள்ளான்.
 
தூங்கி எழுந்ததும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். போலீஸார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சியை சோதனை செய்த போது பன்சோட் சிக்கினான். அவனை கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

அடுத்த கட்டுரையில்