Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (10:09 IST)
நாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்
நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்பி வரும் நிலையில் இனிமேல் நாடாளுமன்றத்திற்கு என ஒருங்கிணைந்த தனியான தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட உள்ளது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது
 
சற்றுமுன் மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இது குறித்து கூறிய போது நாடாளுமன்றத்திற்கு என ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படுவதாகவும் இந்த சேனல் திறப்பு விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
லோக்சபா மற்றும் ராஜசபா நிகழ்ச்சிகளை இந்த டிவிகளில் ஒருங்கிணைத்து ஒளிபரப்பாக இருப்பதாகவும் சன்சத் டிவி என்ற பெயரில் புது சேனல் ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்பிக்களை நடவடிக்கைகள் குறித்து இனிமேல் இந்த தொலைக்காட்சியில் நேரடியாக பொதுமக்கள் பார்க்கலாம் என்றும் இந்தத் தொலைக்காட்சியில் மூலம் தங்களுடைய தொகுதி எம்பிக்கள் தங்கள் தொகுதி குறித்து என்ன பேசுகிறார்கள் என்பதை அவ்வப்போது பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments