Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகக்கவசம் அணியாமல் சுற்றியவரை கட்டிப் போட்டு தூக்கிச் சென்ற சுகாதார பணியாளர்கள் !

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (21:40 IST)
கேரள மாநிலத்தில் போது ஊரடங்கிற்குப் பின் தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு அறிவித்துள்ளது அதேசமயம் கட்டுப்பாடுகள் மீறினாலோ முகக்கவசம் இல்லாமல் சென்றாலோ கடுமை நடவடிக்கைகளுடன் அபராதம் விதிக்கப்படுமென எச்சரித்துள்ளது.
.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா புனித பீட்டர்ஸ் சந்திப்பு இடத்தில் ஒரு நபர் முகக்கசம் இல்லாமல் சுற்றிவருவதாகவும், யார் சொன்னாலு முகக்கவசம் அவர் அணிய மறுப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் கூறினர்.

போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த நபரை விசாரித்தபோது,அவர்  4 நாட்களுக்கு முன் குவைத்தில் இருந்து  கேரளாவுக்கு வந்தது தெரியவந்தது.  14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய அவர் விதிகளை மீறி சுற்றித் திரிந்துள்ளார்.

போலிஸாரின் உத்தரவுப்படி கவச உடையுடன் வந்த சுகாதாரப்பணியாளர்கள, தப்பிச் சென்ற அவரை விரட்டிப்பிடித்து, கை, கால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரைத் தனிமைப்படுத்தினர்.மேலும் விதிமீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments