Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் வழக்கறிஞரை கற்பழித்த நீதிபதி கைது

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (09:56 IST)
தெலுங்கானாவில் நீதிபதி ஒருவர் பெண் வழக்கறிஞரை காதல் வலையில் சிக்க வைத்துப் ஆசை வார்த்தை கூறி அவரை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டையை சேர்ந்தவர் மல்லிகா. இவர் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். அதே நீதிமன்றத்தில் நாராணராவ் என்பவர் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் ஒரே நீதிமன்றத்தில் பணிபுரிந்த மல்லிகாவிற்கும் நாராணராவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. நாராண ராவ் மல்லிகாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகூறி அவரை பலமுறை கற்பழித்துள்ளார்.
 
இதற்கிடையே  நாராணராவ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதை அறிந்த மல்லிகா அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து நாராணராவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ மல்லிகாவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
 
இதனையடுத்து மல்லிகா காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் நீதிபதி நாராணராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
ஒரு நீதிபதியே இப்படி கீழ்த்தரமாக் நடந்து கொண்டிருப்பது தெலுங்கானா மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

சமூகநீதி வேடம் கலைகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காதது ஏன்? விஜய் கேள்வி

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்? தண்டனை சட்டம் வந்தும் இதே நிலை! - மக்களின் கோரிக்கை என்ன?

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments