Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகை படிகட்டாக மாற்றி பெண்களுக்கு உதவிய மீனவர் - கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (09:56 IST)
கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரளிவில் சிக்கியவர்களை, மீட்கச் சென்றபோது மீனவர் ஒருவர் பெண்கள் படகுகளில் ஏற்றுவதற்கு தனது முதுகை படிகட்டாக்கி அவர்களை சுமந்தார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மிகப்பெரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவை அங்கே ஏற்படுத்தியுள்ளது இவ்வெள்ளம். பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ஜெய்சல் என்ற மீனவர் மீட்புப் படையினருடன் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
 
அப்போது பெண்கள், முதியவர்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர். ஜெய்சல் சற்றும் யோசிக்காமல்  படகிற்கு பக்கத்தில் படுத்து கொண்டு தனது முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்களை தனது முதுகின் மேல் ஏறி படகிற்கு செல்லுமாறு கூறினார்.
 
பெண்கள் சற்று தயக்கப்படவே, சும்மா ஏறுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். ஜெய்சலின் செயல்களை பொதுமக்களும் மீட்பு குழுவினருடன் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments