Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் ஓடியதால் மருமகளை திருமணம் செய்துகொண்ட மாமனார்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (14:13 IST)
பீகாரில் கடைசி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் லால். ரோசன் லால் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி தன் மகனுக்கு சுவப்னா(21) என்ற பெண்ணை பார்த்து அவருடன் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் ரோஷன். இதனைத் தொடர்ந்து திருமண நிச்சயமும் நடைபெற்றது.
 
இந்நிலையில் நேற்று முன் தினம் ரோஷன் மகனுக்கும், சுவப்னாவிற்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண வீடே விழா கோலம் பூண்டது போல் காட்சியளித்தது. இரு வீட்டாரும் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் மணமகன் மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார். விசாரித்ததில் மணமகன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவருடன் ஓடிவிட்டதாகவும் தெரியவந்தது.
 
இதனையடுத்து குடும்ப மானம் போகக்கூடாது என்பதற்காக சுவப்னாவின் தந்தை  தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார். மகள் வயது பெண்ணை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

200 இடங்களில் வெற்றி என்பது திமுகவின் பகல் கனவு: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

அடுத்த கட்டுரையில்